1. EachPod

Vijay's Tamil Podcast on "எப்போதும் இன்புற்றிருக்க..."

Author
vijay
Published
Sun 17 Oct 2010
Episode Link
https://www.podomatic.com/podcasts/mvk143/episodes/2010-10-16T19_45_56-07_00

மகிழ்ச்சியை நோக்கியே உலகம் இயங்குகிறது. 'மகிழ்ச்சி கிடைக்காது' எனில், ஒரு செயலைச் செய்யவேண்டிய அவசியமே இல்லை. வழியெல்லாம் வலி இருந்தாலும், முடிவில் இன்பம் இருக்கும் எனில் அந்தச் செயலைச் செய்யலாம் எனும் அடிப்படைத் தத்துவத்தில்தான், சாகசம் புரியவும் சாதனை படைக்கவும் மானுடம் தொடர்ந்து முயற்சி மேற்கொள்கிறது.

கோபத்தைக் கட்டுப்படுத்தி, கற்க வேண்டிய நூல்களைக் கற்று, அடக்கம் உடையவனாக இருப்ப வனுக்குத் தக்க தருணத்தில் உதவுவதற்காக, அறக் கடவுள் காத்திருக்கும்.

அடக்கம் பயில்வோம்; அறக்கடவுள் நமக்காகக் காத்திருக்கிறார். அவரைச் சார்ந்திருந்து, புரியவேண்டிய நற்செயல்களைப் புரிந்து, அறியவேண்டிய மெய்யறிவைப் பெற்று, அமைதியும் ஆனந்தமும் பெறுவோம்.

Share to: