ஜன்னல் கதவின் பின்புறம் மறைந்து நின்ற நியாபகம்
வாசல் வரையில் தென்படும் மங்கை உந்தன் பூமுகம்
காதல் கதைகள் பேசினால் கவிதை தோன்றும் ஆயிரம்
மௌனம் கொஞ்சம் நீடித்தால் கண்கள் தேடும் காரணம்
வானவில்லைக் காண மேகச் சுவற்றில் நின்றேன்
காதல் கதவைத் திறக்க வார்த்தையின்றி நொந்தேன்
*கண்ணீரில் தான் கடிதங்களா சொல் சொல்*
அன்பே ஆருயிரே இங்கே நீ வரவே நெஞ்சம் தவிக்கிறதே கண்ணே
வார்த்தைகள் என கண்டால் வாய் தோற்கும்
பேச்சின்றி போனால் பூவிழிகள் சாகும்
கண்ணீரில் தான் கடிதங்களா சொல் சொல் ❤️