ஈன மிகுத்துள பிறவி-இந்த திருப்புகழில் இருக்கும் வேதாந்த கருத்துக்களை இந்த பதிவில் காணலாம். இறையருள் எங்கும் காற்று போல் பரவியிருக்கிறது. வாழ்க்கைப் படகை காற்று வீசும் திசையில் திருப்புவதே சுய முயற்சி. இறையருளும் சுய முயற்சியும் நாணயத்தின் இருபக்கங்கள் போல் அமைந்து வாழ்க்கையை வழிநடத்த வேண்டும். இவற்றுடன் குருவருள், சாஸ்த்திர அருளும் இணைய பயணம் இனிதே அமையும்