1. EachPod

மிதுனம் மார்ச் 2025 மாத ராசி பலன்

Author
AstroVed
Published
Fri 28 Feb 2025
Episode Link
https://astroved.podbean.com/e/march-matha-mithunam-rasi-palan-2025/

 குடும்ப உறவுகள் இணக்கமாக இருக்கும். வீட்டில் இருக்கும் மூத்த உறுப்பினர்கள் உங்களுக்கு அனுகூலமாக நடந்து கொள்வார்கள். குழந்தைகளுடனான உங்கள் உறவு சுமுகமாக இருக்கும். உங்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் அவர்களுக்கு உதவிகரமாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். என்றாலும் கணவன் மனைவிக்கு இடையே அவ்வப்பொழுது சிறு சிறு சச்சரவுகள் வந்து போகலாம்.  காதலர்கள் தங்கள் உறவு சிறப்பாக இருக்கக் காணலாம். உங்கள் உறவை வலுப்படுத்திக் கொள்ள இந்த மாதம் ஏதுவாக இருக்கும்.   உங்கள் நிதிநிலை இந்த மாதம் சீராக இருக்கும். உங்களுக்கு கூடுதல் வருமானம் வரலாம். ஒரு சிலர் பல்வேறு ஆதாரங்களின் மூலம் பண வரவைப் பெறலாம்.  உபரி வருமானம் பொருளாதார பாதுகாப்பை வழங்கும். தேவையற்ற செலவுகளை தவிர்ப்பதன் மூலம்  உங்களால் பணத்தை சேமிக்க இயலும். போக்குவரத்து அல்லது வீடு சார்ந்த செலவுகள் எழலாம். பணியில் மந்தமான முன்னேற்றம் இருக்கும். நீங்கள் கடினமாக உழைத்தாலும் அதற்கேற்ற பலன் கிடைக்க  சற்று தாமதம் ஆகலாம். பொறுமையுடன் இருக்க வேண்டியது அவசியம். உற்பத்தித் துறையில் பணி புரிபவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள். மருத்துவத் துறையில் இருப்பவர்கள் நற்பலன்களைப் பெற இந்த மாதம் சற்று காத்திருக்க வேண்டும்.  சினிமா மற்றும் மீடியா துறையில் இருப்பவர்கள்  அதிகபட்ச கவனத்துடன் பணியாற்ற வேண்டும். கற்பித்தல் துறையில் உள்ள மிதுன ராசிக்காரர்களுக்கு இது அனுகூலமான காலக்கட்டம். தொழில் சிறப்பாக நடக்கும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் இருந்தால் அதனை சற்று தள்ளிப் போடவும். அதற்கு இந்த மாதம் ஏற்ற நேரம் அல்ல.  இந்த மாதம் நீங்கள் சிறு சிறு ஆரோக்கியப் பிரச்சினைகளை சந்திக்கலாம். அஜீரணம் ஏற்படாமல் இருக்க உண்ணும் உணவில் கவனம் தேவை.மாணவர்களுக்கு இது வரவேற்கத்தக்க மாதமாக இருக்கும். பள்ளிக் கல்வி படிக்கும் மாணவர்கள் ஆசிரியர்களின் சிறந்த வழிகாட்டலைப் பெறுவார்கள்.

Share to: