1. EachPod

மேஷம் ஏப்ரல் 2025 மாத ராசி பலன்

Author
AstroVed
Published
Fri 04 Apr 2025
Episode Link
https://astroved.podbean.com/e/april-matha-mesham-rasi-palan-2025/

உங்கள் உத்தியோகம்  அல்லது தொழிலில் முன்னேற சிறந்த வாய்ப்புகள் இருக்கலாம். வழியில் சிறிய சவால்கள் தோன்றக்கூடும். ஆனால் அவை ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்கு இடையூறாக இருக்காது. உங்கள் தொழில்முறை முயற்சிகளில் குறிப்பிடத்தக்க வெற்றியை நீங்கள் எதிர்பார்க்கலாம். உங்கள் நிதி மேம்படக்கூடும், இது உங்களை மேலும் நேர்மறையாகவும் நம்பிக்கையுடனும் உணர வைக்கும். நீங்கள் உங்கள் தொழிலில் உயரும்போது உங்கள் வாழ்க்கைத் துணையும்  உங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளலாம். உங்கள் உடல்நலம் இப்போது நன்றாக இருக்கலாம். உங்கள் காதல் வாழ்க்கையில் சிக்கல்கள் உருவாகலாம். சுமூகமான உறவுக்கு நல்ல தொடர்பு அவசியம். குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் உங்கள் உறவுகள் வலுவாக இருக்கும். மேலும் உங்களுக்கு அவர்களின் நல்லாதரவு கிட்டும்.  உயர்கல்வி மற்றும் வெளிநாட்டில் படிக்கத் திட்டமிடுபவர்களுக்கும் இந்த மாதம் சாதகமாக இருக்கும். ஏப்ரல் மாதம் புதிய கற்றல் வாய்ப்புகள் மூலம் சுய வளர்ச்சியைக் கொண்டுவரும். இந்த மாதம் முன்னேற்றம், மகிழ்ச்சி மற்றும் நல்ல உறவுகளை எதிர்பார்க்கலாம். 

Share to: